பல முறை பணம் எடுப்பதை தடுக்க அழியாத மை - மக்கள் எதிர்ப்பு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வங்கிகளில் பல முறை பணம் எடுப்பதை தடுக்க அழியாத மை - மக்கள் கடும் எதிர்ப்பு

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்கிற மோடி அரசின் அறிவிப்பை அடுத்து, பழைய நோட்டுகளை மாற்ற மக்கள் வங்கிகளில் கூடுவதால் ஏற்படும் நெருக்கடியை தவிர்க்கவும், ஒருவரே மீண்டும் மீண்டும் பணம் மாற்ற வங்கிக்கு வருவதை தவிர்க்கவும், பணம் மாற்ற வருபர்களின் கையில் அழியாத மை வைக்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில் பொது மக்களிடம் இது பற்றி கருத்துக் கேட்டார் செய்தியாளர் ஜெயகுமார்