கேரளாவில் நாய்களைக் கொல்லும் குழுக்கள் மீது நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தென் இந்திய மாநிலமான, கேரளாவில் தெரு நாய்களைக் கொல்லும் கண்காணிப்புக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

அடுத்தடுத்த நாய்க் கடிகள் மற்றும் நாய்களால் ஏற்பட்ட காயங்கள் ஆகியவற்றால் குறைந்தது இரண்டு முதியவர்கள் உயிரிழந்தனர்; அதன் காரணமாக அங்கு நாய்களைக் கொல்வது மிக வழக்கமானதாக ஆகிவிட்டது.

இளம் அரசியல் ஆர்வலர்கள் நாய்களை கொன்று வருகின்றனர் மேலும் நாய்களைக் கொல்லும் கண்காணிப்புக் குழுக்களுக்கு பரிசுகளும் அளிக்க அவர்கள் முன்வந்துள்ளனர்.

நாய்களும் தெய்வீக படைப்புகள் தான் அவைகளை கொல்வதும் சட்டத்திற்கு உட்பட்டுதான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் கேரள அதிகாரிகளின் முயற்சிகள் எளிதானதாக இல்லை.

தொடர்புடைய தலைப்புகள்