தமிழ்நாட்டில் 3 தொகுதிகளிலும் புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் பரபரப்பான வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளிலும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதியிலும் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

காலை பதினோரு மணி நிலவரப்படி அரவக்குறிச்சி தொகுதியில் 43.1 சதவீத வாக்குப்பதிவும் தஞ்சாவூர் தொகுதியில் 34.21 சதவீத வாக்குப்பதிவும் திருப்பரங்குன்றத்தில் 36.01 சதவீத வாக்குப்பதிவும் நடந்துள்ளது.

புதுச்சேரியின் நெல்லித்தோப்பு தொகுதியில் காலை 11.15 மணியளவில் 39.51 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

இதற்கிடையில், புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகக் கூறி, அ.தி.மு.க. வேட்பாளர் ஓம் சக்தி சேகர் தொண்டர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அரவக்குறிச்சியில் உள்ள மலைக்கோவிலூரில் வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், வாக்குப்பதிவு அரைமணி நேரம் நிறுத்தப்பட்டது. பிறகு எந்திரம் சரிசெய்யப்பட்டு தற்போது வாக்குப்பதிவு நடந்துவருகிறது