கான்பூர் ரயில் விபத்தில் உயிர் பிழைத்தவர்களை தேடும் பணி நிறுத்தி வைப்பு

இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த ரயில் விபத்தில் உயிர்பிழைத்தவர்களை தேடும் பணியை மீட்புப் பணியாளர்கள் நிறுத்தியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த விபத்தில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரிலிருந்து பாட்னாவிற்கு சென்றுக் கொண்டிருந்த போது அந்த ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.

விபத்து நடந்த பகுதியில் ரெயில் பெட்டிகள் நொறுங்கி உலோகங்கள் உருக்குலைந்த நிலையில் காணப்படுவது போல காட்சியளிக்கிறது.

கான்பூர் ரயில் விபத்து குறித்து மேலும் படிக்க: கான்பூர் ரயில் விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை உயரலாம் என அச்சம்

சமீப வருடங்களில் நடைபெற்ற மிக மோசமான ரயில் விபத்தாக கருதப்படும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தண்டவாளத்தில் இடைவெளி ஏற்பட்டிருக்கலாம் அல்லது விரிசல் ஏற்பட்டு இந்த விபத்து நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.