திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.கே. போஸ் வெற்றி

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே. போஸ் வெற்றிபெற்றுள்ளார்.ஏ.கே. போஸ் 1,13,032 வாக்குகளை பெற்றிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

திமுக வேட்பாளர் பி. சரவணன், 70,362 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

பாரதீய ஜனதாக் கட்சியின் வேட்பாளர் சீனிவாசன் 6930 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தையும் தே.மு.தி.கவின் தனபாண்டியன் 4105 வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்தையும் பிடித்தனர்.

2214 பேர் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என வாக்களித்துள்ளனர்.

மொத்தம் பதிவான வாக்குகளில் அதிமுகவேட்பாளர் 55.65 சதவீத வாக்குகளைக் கைப்பற்றியிருக்கிறார்.

இந்தத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழச் சின்னம் ஒதுக்கப்படவில்லை என்பதால், அக்கட்சி இங்கே போட்டியிடவில்லை.

சட்டமன்றத் தேர்தலின்போது இந்தத் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சீனிவேல் வெற்றி பெற்றாலும் பதவியேற்பதற்கு முன்பாக மரணமடைந்தார். சீனிவேல் 93453 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

தொடர்புடைய தலைப்புகள்