அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் செந்தில்பாலாஜி வெற்றி

அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி வெற்றி பெற்றுள்ளார்.

Image caption செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி 88, 068 வாக்குகளை பெற்றுள்ள நிலையில், இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.சி. பழனிச்சாமி 64, 407 வாக்குகளை பெற்றுள்ளார்.

பாரதீய ஜனதாக் கட்சியின் வேட்பாளர் 3162 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தையும், தேமுதிகவின் வேட்பாளர் 1513 வாக்குகளைப் பெற்று ஐந்தாவது இடத்தையும் பிடித்தனர்.

1538 பேர் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என வாக்களித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த மே மாதம் நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது, பணப்பட்டுவாடா புகார் எழுந்ததையடுத்து, தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

தொடர்புடைய தலைப்புகள்