இந்தியா குண்டு வீச்சில் 9 பேர் பலி என பாகிஸ்தான் குற்றச்சாட்டு

சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிரதேசத்தில் எல்லை கடந்து இந்தியா வீசிய ஷெல் குண்டு ஒன்று பயணியர் பேருந்து ஒன்றை தாக்கியதில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 7 பேர் காயமடைந்திருப்பதாகவும் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption கட்டுப்பாட்டுக் கோடு என்று அறியப்படும் யதார்த்த எல்லையை கடந்து இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்கள் சமீபத்திய மாதங்களில் அதிகரிப்பு

மோட்டர் குண்டு வீச்சில் ஒரு வீடு தாக்கப்பட்டதில், மேலும் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, பாகிஸ்தானிலிருந்து எல்லை கடந்து வந்து தீவிரவாதிகள், இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி மூன்று இந்திய படையினரை கொன்றதற்கு பதிலடி தரப்படும் என்று இந்தியா உறுதி அளித்திருந்தது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஷெல் குண்டு ஒன்று பயணியர் பேருந்து ஒன்றை தாக்கியதில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கூறுகிறது

கட்டுப்பாட்டுக் கோடு என்று அறியப்படும் யதார்த்த எல்லையை கடந்து இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்கள் சமீபத்திய மாதங்களில் அதிகரித்திருக்கின்றன.

தொடர்புடைய தலைப்புகள்