இந்திய தலைநகர் அருகே கிராமம் ஒன்றில் புகுந்த சிறுத்தையை அடித்து கொன்ற மக்கள்

இந்தியாவில் சிறுத்தை ஒன்று வழி தவறி கிராமத்திற்குள் புகுந்தததை தொடர்ந்து பொதுமக்களால் அடித்து கொல்லப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

இந்திய தலைநகர் தில்லிக்கு மிக அருகில் உள்ள கூர்கான் அருகே உள்ள ஒரு பகுதியிலிருந்து சிறுத்தை ஒன்று தெருவில் திரிந்து கொண்டிருந்த விலங்குகளை தாக்கிவிட்டு ஒரு வீட்டிற்குள் புகுந்து கட்டிலுக்குள் ஒளிந்து கொண்டது என்று கூறப்படுகிறது.

சிறுத்தையை கூண்டிற்குள் பிடிக்க வந்ததாகவும், ஆனால் சிறுத்தையை தாக்கிய 1,500 பேர் கொண்ட கூட்டத்தை தடுக்க முடியவில்லை என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

9 பேர் காயம் அடைந்துள்ளனர் மற்றும் சிறுத்தையும் உயிரிழந்துவிட்டது.

சிறுத்தையை கொன்ற குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்ளூர் வன உயிரின தலைமை அதிகாரி கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்