பிஸ்கட் பெட்டிகளில் கடத்தப்பட்ட குழந்தைகள்: 13 பேர் கைது

பச்சிளங் குழந்தைகளைக் கடத்தியதாக எழுந்துள்ள சந்தேகத்தின் பேரில் 13 நபர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சில குழந்தைகளை பிஸ்கட் பெட்டிகளில் வைத்து கடத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும் அதில் அடங்கும்.

படத்தின் காப்புரிமை Getty Images

மேற்கு வங்கத்தில் கொல்கொத்தா நகரத்திற்கு அருகில் ஒரு தனியார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில், கருக்கலைப்பு செய்ய விரும்பிய பெண்கள் அதற்குப் பதிலாக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு சொல்லப்பட்டு அதற்காக அவர்களுக்கு பணம் கொடுக்கப்படும் திட்டம் செயல்பட்டு வந்ததை போலிசார் வெளிக் கொண்டுவந்துள்ளனர்.

அவர்கள், ஆண் குழந்தை பெறும் பெண்களுக்கு 4,000 அமெரிக்க டாலர்களும், பெண் குழந்தை பெறும் பெண்களுக்கு 1,500 அமெரிக்க டாலர்களும் கொடுத்ததாக கூறப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுக் காலத்தில், டஜன் கணக்கான புதிதாகப் பிறந்த குழந்தைகள் பிஸ்கட் பெட்டிகளில் வைத்துக் கடத்தப்பட்டு, அருகில் உள்ள ஒரு தத்தெடுக்கும் மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விற்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

சில குழந்தைகள் பிரிட்டன் அல்லது அமெரிக்கா போன்ற நாடுகளில் இருப்பதாகக் கருதப்படுகிறது.