கீதா ராமகிருஷ்ணன்: குரலற்றவர்களின் குரல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அணிதிரட்டப்படாத பெண்களுக்காக அர்ப்பணிப்புடன் ஒரு பெண்

எல்லாக் கட்சிகளிலுமே தொழிலாளர்களுக்கு என தனியான அமைப்புகள் இருந்தாலும் அமைப்புச்சாரா தொழிலாளர்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை.

"அரசியல் கட்சிகளுக்கு ஏகப்பட்ட நிர்பந்தங்கள், கூட்டணி - தேர்தல் என. ஆகவே தொழிலாளர்களுடன் பணியாற்றுவது என முடிவுசெய்தேன்" என்கிறார் கீதா.

சமூகத்தின் விளிம்பு நிலையில் எப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக, தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார் கீதா ராமகிருஷ்ணன்.

பெண்களின் பாதுகாப்பு கருதி அவர்கள் இருக்கும் அனைத்து இடங்களிலும் புகார் குழுக்களை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார் அவர்.

கட்டடத் தொழிலாளர்கள், வீட்டு வேலை பார்ப்பவர்கள், ஊரை விட்டு வந்து வெளியூரில் பணியாற்றுபவர்கள், தெருவோரம் கடை வைத்திருப்பவர்கள், சூளையில் வேலை பார்ப்பவர்கள் என பலரது பிரச்சனைகளுக்காகவும் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து செயல்பட்டுவருகிறார் கீதா.

பிபிசியின் 100 பெண்கள் தொடரின் ஒரு அங்கமாக கீதா ராமகிருஷ்ணனை பிபிசி தமிழ் பேட்டி கண்டுள்ளது.

அவரை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள

கீதா ராமகிருஷ்ணன்: குரலற்றவர்களின் குரல்

பிபிசி 100 பெண்கள் தொடர் என்றால் என்ன?

தொடர்புடைய தலைப்புகள்