பஞ்சாப் : சிறைச்சாலையை தாக்கி சீக்கிய தீவிரவாத குழுவின் தலைவர் விடுவிப்பு

வட இந்தியாவில் சீக்கிய தீவிரவாதி என்று குற்றஞ்சாட்டப்பட்டவர் சிறையிலிருந்து தப்பிச் சென்றதை தொடர்ந்து பெரும் தேடுதல் வேட்டை ஒன்றை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

காலிஸ்தான் விடுதலைப் படை என்ற தடை செய்யப்பட்ட சீக்கிய தீவிரவாதக் குழுவின் தலைவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர் ஹர்மிந்தர் சிங் மின்டூ.

பஞ்சாபில் இருந்த உயர் பாதுகாப்பு சிறைச்சாலையான நாபா சிறை மீது தாக்குதல் நடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர் அவரை விடுவித்தனர்.

வேறு பல சிறைக் கைதிகளும் தப்பி உள்ளனர்.

இரு ஆண்டுகளுக்குமுன் மின்டூ கைது செய்யப்பட்டார்.

கொலை முயற்சியில் ஈடுபட்டது மற்றும் கொலைக்கு சதித்திட்டம் தீட்டியது உட்பட தொடர் குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்