500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் தடையை எதிர்த்து எதிர்கட்சிகள் இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

இந்தியாவில் நாடும் முழுவதும் பெரும் குழப்பம் மற்றும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை தடைசெய்த அறிவிப்பிற்கு எதிராக இன்று(திங்கட்கிழமை) நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இது ஒரு ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என தனது முடிவை நியாயப்படுத்தியுள்ளார்.

மாறாக வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை இந்தியாவிற்கு திரும்பி கொண்டு வருவதாக தான் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறியதை மறைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

சுமார் 90 சதவீத இந்திய பண பரிவர்த்தனைகள் ரூபாய் நோட்டுக்கள் மூலமாகதான் நடைபெறுகிறது; மேலும் பலருக்கு வங்கி கணக்குகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.