புற்றுநோயிலிருந்து மீண்டு புற்றுநோய்க்கெதிரான போர்- ராதிகா சந்தானகிருஷ்ணன்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

புற்றுநோயிலிருந்து மீண்டு புற்றுநோய்க்கெதிரான போர்- ராதிகா சந்தானகிருஷ்ணன்

புற்றுநோயிலிருந்து மீண்டு வந்து பெண்களுக்கென "பெண்நலம்" என்னும் புற்றுநோய் சேவை அமைப்பை தொடங்கி அதனைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் ராதிகா சந்தான கிருஷ்ணன். இந்த அமைப்பு குறித்து ராதிகாவுடன் உரையாடினார் பிபிசி தமி்ழோசையின் விஷ்ணுப்ரியா.

பெண்களுக்கு வரும் புற்றுநோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அந்த புற்று நோய்களுக்கான சிகிச்சையை சரியான நேரத்தில் தொடங்க வேண்டும் என்ற நோக்கத்திலும் தொடங்கப்பட்ட புற்றுநோய் மையம் தான் "பெண்நலம்" என்னும் அரசு சாரா அமைப்பு.

அதன் நிறுவனர் ராதிகா சந்தான கிருஷ்ணன், இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பின்பு அதிலிருந்து மீண்டு வந்தவர்.

எனவே புற்றுநோயால் பாதிப்பிற்குள்ளான பெண்களுக்கு தேவைப்படும் மருத்துவ சிகிச்சை மற்றும் மனரீதியான ஆதரவு ஆகியவற்றின் தேவைகளை அறிந்திருந்த ராதிகா சந்தான கிருஷ்ணனன், புற்றுநோய் குறித்து தன்னால் முடிந்த வேவையை சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பெண்நலம் என்னும் அமைப்பை தொடங்கியுள்ளார்.

இதுவரை சுமார் 2 லட்சம் பெண்களுக்கு மத்தியில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள 'பெண்நலம்', 6000 பெண்களுக்கு புற்றுநோய்க்கான சோதனையை நடத்தியுள்ளது . இது அனைத்தும் ராதிகா சந்தான கிருஷ்ணனின் முன் முயற்சியால் நிகழ்ந்தவை; தற்போது 'பெண்நலம்' அமைப்பு அடுத்த கட்டமாக சென்னை புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில் தனது முயற்சிகளை மேலும் விரிவுப்படுத்தவுள்ளது.