பண நோட்டுப் பற்றாக்குறை : திமுக , எதிர்க்கட்சியினர் கைது

மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த பின் நிலவும் நோட்டுப் பற்றாக்குறை விவகாரம் தொடர்பாக இன்று போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல திமுகவினர் கைது செய்யப்பட்டார்கள்.

Image caption பண நோட்டுப் பற்றாக்குறைக்கு எதிராகப் போராட்டம்

இது போலவே,தமிழ்நாட்டில் , விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர்.

சென்னை பாரி முனை பகுதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், திமுகவின் பொருளாளருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.

Image caption பண நோட்டுப் பற்றாக்குறைக்கு எதிராக போராட்டம்

திமுகவின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட பெருந்திரளான கட்சியின் தொண்டர்கள் இந்த ஆர்ப்பாட்ட போராட்டத்தில் பங்கேற்றார்கள்.

அப்போது உரையாற்றிய மு.க.ஸ்டாலின், மோதி அரசாங்கத்தின் நடவடிக்கை என்பது கிராம மக்களுக்கு எதிரான போர் போல உள்ளது என்றார்.

பின்னர் அவர்களை போலிசார் கைது செய்தனர். மு.க.ஸ்டாலினுடன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட மூத்த தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து தமிழகமெங்கும் திமுகவினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், கைது நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன.

Image caption திமுக போராட்டம்

பிற எதிர்கட்சிகள் தனித்தனி்யே ஆர்ப்பாட்டம்

மோதி அரசாங்கத்திற்கு எதிராக தேசிய அளவில் முக்கிய எதிர்கட்சிகளால் அறிவிக்கப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டம், நாடெங்கிலும் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் திமுகவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் என முன்னதாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது. தவிர காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்கள்.

அனைத்து எதிர்கட்சிகளும் தனித்தனியாகவே இன்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள்.

குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மதுரையிலும் தனித்தனியாக ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் உள்ளிட்டோரும் இன்று சென்னையில் வங்கியை முற்றுகை செய்யும் போராட்டத்தில் ஈடுப்பட முயன்றதால் கைது செய்யப்பட்டார்கள்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தின் போது உரையாற்றிய இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்ட அறிவிப்பை திரும்ப பெற கூறி மத்திய அரசை வலியுறுத்தினார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் உள்ளிட்டோரும் அப்போது வங்கியை முற்றுகை செய்யும் போராட்டத்தில் ஈடுப்பட முயன்றதால் கைது செய்யப்பட்டார்கள்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தின் போது உரையாற்றிய இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்ட அறிவிப்பை திரும்ப பெற கூறி மத்திய அரசை வலியுறுத்தினார்.

இதற்கிடையே புதுவையிலும் முதல்வர் நாராயணசாமி தலைமையில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது மோதிக்கு எதிராகவும், மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.