சிறையிலிருந்து தப்பித்த சீக்கிய தீவிரவாத குழுவின் தலைவர் போலிசிடம் பிடிப்பட்டார்

இந்தியாவில் சிறையிலிருந்து தப்பித்த, தடை செய்யப்பட்ட சீக்கிய தீவிரவாதக் குழு ஒன்றின் தலைவராகக் கருதப்படும் ஹர்மிந்தர் சிங் மின்டூவை மீண்டும் கைது செய்துள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நாபா சிறைச்சாலை வளாகம்

கடந்த ஞாயிறன்று வட இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் நாபா என்ற பகுதியிலிருந்த ஒரு உயர் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட சிறையை போலிஸ் உடைகளில் வந்த ஆயுத குழுவினர் தாக்கி மின்டூவை விடுவித்தனர்.

இந்திய தலைநகர் தில்லியின் புறநகர் பகுதியில், பஞ்சாபிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் அவரை பிடித்ததாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

சிறையிலிருந்து தப்பித்தவர்களில் குறைந்தது நான்கு பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.

மூன்று போலிசார் மற்றும் ஒரு சிறை காவலர் இந்த சிறைத்தாக்குதலின் போது காயம் அடைந்துள்ளனர்.

மேலும், தேடுதல் வேட்டையின் போது போலிஸ் சோதனைச்சாவடி ஒன்றில் தன்னுடைய வாகனத்தை நிறுத்தாமல் சென்ற பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்