கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழா: தமிழக மீனவர்களை அனுமதிக்க தலைமைச் செயலர் மத்திய அரசுக்குக் கடிதம்

Image caption கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயம் (கோப்புப்படம்)

கச்சத்தீவில் புனரமைக்கப்பட்ட புனித அந்தோணியார் தேவாலய திருவிழா இந்த மாதம் 7-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அந்த விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க அனுமதியளிக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கருக்கு தமிழக அரசின் தலைமைச் செயலர் ராம மோகன் ராவ் இன்று வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

அந்த தேவாலயத்தை இடித்து, புனரமைக்க இலங்கை தன்னிச்சையாக முடிவு செய்தபோது, இரு நாட்டு மீனவர்களின் கலாசாரம் தொடர்புடையது என்பதால், இரு நாடுகளும் இணைந்து அந்தப் பணியைச் செய்ய வேண்டும் என கடந்த மே மாதம் தமிழக முதலமைச்சர் மத்திய அரசை வலியுறுத்தியையும் தலைமைச் செயலர் தனது கடித்த்தில் நினைவு கூர்ந்துள்ளார்.

மேலும், கச்சத்தீவை மீட்டு, தமிழக மீனவர்களின் உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்தச் சூழ்நிலையில், கச்சத்தீவு திருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்பது, அவர்களது அசைக்க முடியாத உரிமை என்று தமிழக அரசின் தலைமைச் செயலர் தனது கடிதத்தில் குறி்ப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்