சென்னை வெள்ளப்பெருக்கில் தத்தளித்தபோது உதவிய தன்னார்வலர்கள்

படத்தின் காப்புரிமை AP
Image caption 24 மணிநேரத்தில் அதிகப்படியாக 272 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது

2015 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி, ஒரு நூற்றாண்டு காலமாக காணாத மழை பொழிவிற்கு பின்னர், இந்தியாவின் தென் பகுதியில் இருக்கும் சென்னை மாநகரம், பேரழிவை உருவாக்கிய வெள்ளப்பெருக்கால் தத்தளித்தது. 24 மணிநேரத்தில் அதிகபடியாக 272 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மாநகரத்தின் பல பகுதிகள் பல நாட்களாக தீவுகளாகி போயின. மின்சார மற்றும் செல்பேசி இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டதால், மீட்புதவி முயற்சிகள் தடைப்பட்டன. ஆனால், இத்தகைய நிலைமையில், மாபெரும் தன்னார்வ முயற்சியோடு சென்னை மாநகர மக்கள் திரண்டெழுந்தனர்.

சிலர், அரசோடு ஒத்துழைத்து மீட்புதவிகளை மேற்கொண்டனர். பிறர், அரசு சாரா நிறுவனங்கள் வழியாக உதவினர்.

அஸ்வின் சகாபிரியா, ஆய்வாளர்

படத்தின் காப்புரிமை NAVEEN PM

மீட்புதவி மற்றும் நிவாரணப் பணிகளில் அரசுக்கு உதவும் வகையில் "சென்னை மழை நிவாரணம்" என்ற பல அரசு சாரா நிறுவனங்களை ஒருங்கிணைத்து செயல்பட்ட நிறுவனத்தில் பேரிடர் மேலாண்மை அணியில் சேர்ந்து 23 வயதான அஸ்வின் சகாபிரியா பணியாற்றினார்.

தொடக்கத்தில், மீட்புதவி பணியாளர்கள் பாதிக்கப்பட்டவரோடு மிகவும் விரைவாக தொடர்பு கொள்ளுவதற்கு, மின்னணு குறிச்சொற்களை பயன்படுத்துகிற தரவு ஒன்றை உருவாக்கி சகாபிரியா உதவியிருந்தார். இந்த மின்னணு குறிச்சொற்கள் புவியியல் இடங்களை புகைப்படங்களாக அல்லது காணொளியாக சமூக வலைதளங்களில் பதிவேற்ற உதவுபவை.

வெள்ளக் காடாக காட்சியளிக்கும் சென்னை மாநகரம்

தரவுகள் பற்றி எதுவும் தெரியாத சகாபிரியா, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் பணிபுரிகின்ற தொழில்நுட்ப துறை நண்பர்களிடம் உதவிகள் பெற்று இதனை உருவாக்கியிருந்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 2015 ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கில் சிக்கிய சென்னையின் ஒரு பகுதி

மிகவும் இன்றியமையாத தேவைகளான ஆடைகள் மற்றும் உணவு பொருட்கள் தேவைப்படுகின்ற 1,500 பேரை இனம்கண்டு, உடனடியாக சென்றடைய மீட்புதவி அணிகளுக்கு இந்த தரவு உதவியிருக்கிறது.

வெள்ள காலத்தில் இறுதிக் கிரியைகளை நடத்த குடும்பத்தினர் பட்ட பாடு

’’ வெள்ளப்பெருக்கு எனக்கு பாடங்களை கற்பித்திருக்கிறது, தரவுகளை உருவாக்குவது பற்றி எனக்கு தெரியாது. ஆனால், விரைவாக உதவி கேட்டு, பல மக்களுக்கு உதவிய ஒன்றை உருவாக்க முடிந்தது. பிறருக்கு உதவுகின்ற ஒரு வழியை கண்டறிந்தேன். இது மிக பெரிய படிப்பினை. நீங்கள் விரும்பினால், எதாவது ஒரு வழியில் பிறருக்கு உதவலாம்" என்று அவர் குறிப்பிடுகிறார்.

நவீன் குமார் ஜனார்தனன், மென்பொருள் ஆலோசகர்

படத்தின் காப்புரிமை AVEEN PM

நண்பர் ஒருவரால் தூண்டப்பட்ட 28 வயதான ஜனார்தனன், தன்னுடைய அடுக்குமாடி வீட்டை, வெள்ளப்பெருக்கால் தவித்த மக்களுக்கு வழங்குவதற்கு தயாராக இருப்பதாக ஒரு முகநூல் பதிவிட்டார்.

பயன்படுத்திய ஆடைகளை சேகரித்து, அவற்றை வகைப்படுத்தி, மூட்டை கட்டி, அனாதை இல்லங்கள் மற்றும் பிற சமூக நல நிறுவனங்களுக்கு அனுப்புகின்ற "கேர்ஸ்டீம்" என்ற தன்னுடைய நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு பிரிவின் ஒரு பகுதியாக ஜனார்தனன் இருக்கிறார்.

தமிழக மழை: பலியானோர் எண்ணிக்கை 100ஐத் தாண்டும்?

தன்னார்வ பணியின் போது, வெள்ளப்பெருக்கு பகுதிகளில் சிக்கிக்கொண்டோரை இனம்கண்டு, உலர் ஆடைகளை வழங்க அவர் உதவினார். அவரும் "சென்னை மழை நிவாரணம்" அணியின் பகுதியாக இருந்து செயல்பட்டார்.

"நானொரு சிறிய நகரத்தை சேர்ந்தவன். என்னுடைய உயர் படிப்புக்காகவும், தொழில் செய்யவும் 2008 ஆம் ஆண்டு சென்னை வந்தேன். வெளியிடங்களில் இருந்து வருவோரை மிகவும் எளிதாக வரவேற்கின்ற நகரமாக, சென்னை இல்லாததாக எப்போதும் உணர்ந்திருக்கிறேன். வெள்ளப்பெருக்கின்போது என்னுடைய கருத்தை மாற்றிக் கொண்டேன். ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு உதவினர். அதுவொரு தனி சிறப்புபான அனுபவமாக இருந்தது. இப்போது சென்னை நகரவாசியாக உணர்கிறேன்" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்,

பிரதீப் ஜான், பொழுதுபோக்கு வானிலை வலைப்பதிவாளர்

படத்தின் காப்புரிமை NAVEEN PM

தமிழ் நாடு வானிலை மனிதர் என்ற பெயரால் அறியப்படும் 35 வயதான ஜான், அறிவியல் சமூக உலக வானிலை ஆய்வு அமைப்பாலும், மூன்று முதல் பத்து நாட்கள் வரையான வானிலை ஆய்வுக்களை வழங்கும் ஐரோப்பிய மையத்தாலும் பயன்படுத்துகின்ற எண் மாதிரிகளின் அடிப்படையில் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வானிவை அறிவிப்புக்களை வழக்கமாக பதிவிட்டு கொண்டிருந்தார்.

தமிழ்நாட்டில் கனமழை தொடர்கிறது

அவருடைய சில பதிவுகள் 2 லட்சம் பேரை சென்றடைந்திருந்தன. சமூக ஊடகங்களில், "வானிலை அறிவிப்பாளராக உருவாகியிருந்த, ஜானின் பதிவுகளை மீட்புதவி அணிகள் பயன்படுத்தத் தொடங்கின.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய விமானங்கள்

முன்னதாக பின் தொடர்பவர்கள் 5 ஆயிரம் பேர் என்றிருந்த அவருடைய சமூக ஊடகப் பக்கம், மீட்புதவி அணிகள் பயன்படுத்த தொடங்கிய பிறகு, டிசம்பரில், ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேராக உயர்ந்தது. அனைவருமே வானிலை பற்றிய சமீபத்திய தகவலுக்காக ஜானின் பக்கத்தை பின்தொடர்ந்திருக்கிறார்கள்.

விமானங்களில் விஷ ஜந்துக்கள்: "சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சேவைகள் துவங்க காலதமாதமாகும்"

"அதுவரை நான் மழை பெய்யுமா? என்பது பற்றி மட்டுமே பதிவிட்டு வந்தேன். என்னுடைய பதிவுகளை பார்த்த பின்னர், தற்போது வீட்டிற்கு செல்வது பாதுகாப்பானதா? என்று பலரும் கேட்க தொடங்கினர். மழை எப்போது நிற்கும் என்று அவர்கள் அறிய விரும்பினர். அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பை உணர தொடங்கினேன். வானிலையை பார்ப்போர் அனைவரும் மழை பெய்வதை விரும்புவோர் தான். ஆனால், அன்றைய நாள் மழை நின்றுவிட வேண்டும் என்று செபித்தேன்" என்று தன்னுடைய அனுபவத்தை ஜான் தெரிவித்தார்.

சத்தியருபா சேக்ஹார், இயக்குநர் நுகர்வோர் மற்றும் பொது மக்கள் செயல்பாட்டு குழு (சிஎஜி)

படத்தின் காப்புரிமை NAVEEN PM

வெள்ளப்பெருக்கின்போது மிகவும் தேவைப்பட்ட இன்றியமையாத பொருட்களான உலர் உணவு பொருட்கள், படுக்கை விரிப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய நிவாரண உபகரணத்தை வடிவமைக்க இணைய வழி கடை ஒன்றோடு இணைந்து சேக்ஹார் உருவாக்கினார்.

நிவாரண மற்று மீட்புதவி நடவடிக்கையாக சென்னையின் வட பகுதியிலுள்ள குப்பத்துவாசிகளுக்கு இத்தகைய ஆயிரம் நிவாரண உபகரணங்களை அவர் வழங்கியிருக்கிறார். குப்பத்து பகுதிகளில் நிவாரண முயற்சிகளின் செயல்திறனையும் அவர் மதிப்பீடு செய்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption படகு மூலம் மீட்புதவி

தற்போது நிலவி வருகின்ற வறுமையையும், சமத்துவமின்மையும் வலுப்படுத்துவதாகவும், வெளிப்படுத்துவதாகவும் இந்த வெள்ளப்பெருக்கு அமைந்துவிட்டதாக அவர் கூறியிருக்கிறார்,

சென்னையை வெள்ளத்தில் மூழ்கடித்த ஏரி திறப்புக்கு யார் பொறுப்பு?

"ஏழைகளுக்கு போதுமான நிலம் இல்லாமை, போதிய மலிவான வீடுகள் இல்லாமை போன்ற முந்தைய நகர்ப்புற வளர்ச்சியினால் எழுந்த பல அமைப்பு ரீதியிலான பிரச்சனைகள் இருக்கின்றன" என்று அவர் கூறினார்.

பீட்டர் வான் கியட், நிறுவனர், சென்னை மலையேற்ற கிளப்

படத்தின் காப்புரிமை NAVEEN PM

1998 ஆம் ஆண்டு பெல்ஜியத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்துவிட்ட பீட்டர் வான் கியட் மலையேறுவதை ஏற்பாடு செய்வதிலும், மலையேற்ற குழுவினரை இரு மடங்காக அதிகரித்து, சுற்றுச்சூழல் பரப்புரைகளை மேற்கொள்வதலும் நன்றாகவே அறியப்படுபவர்.

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது குறித்து அரசு விளக்கம்

வெள்ளப்பெருக்கின் போது, ஆற்றில் பெருகி ஓடிய நீர், நகரின் 20 கிலோ மீட்டர் (12 மைல்) கடற்கரையோரமாக இருந்த டன்கணக்கான பிளாஸ்டிக் கழிவுகளை அடித்து சென்றது.

இவற்றை எல்லாம் அகற்றி சுத்தப்படுத்துவதை ஏற்பாடு செய்வதற்கு வான் கியட் உதவினார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption உயிர் காக்கும் மனித சங்கிலி

"எல்லா விதமான தன்னலத்தையும், மனித குலத்திற்கு எதிரானவற்றையும் இந்த வெள்ளப்பெருக்கு அடித்து சென்றுவிட்டது" என்பதை தன்னுடைய கருத்தாக வான் கியட் பதிவு செய்திருக்கிறார்.

"குப்பத்துவாசிகள் மற்றும் பணக்காரர்கள் ஒருவருக்கொருவர் பக்கத்தில் அமர்ந்திருந்தனர். பணக்காரர்கள் ஏழைகளுக்காக உணவு சமைத்து கொண்டிருந்தனர். வெள்ளப்பெருக்கில் சிக்கியிருந்த பணக்காரர்களை படகுகளில் மீட்க ஏழைகள் சென்றனர். எல்லோரும் சமமாகக் கருதப்பட்டனர். அனைவரும் பகிர்ந்து கொண்டனர் என்பதால் என்னை பொறுத்த மட்டில் மனிதநேயம் திரும்பி வந்தாகவே கருதுகிறேன்" என்கிறார் வான் கியட்

தொடர்புடைய தலைப்புகள்