சுங்கச்சாவடிகளில் மீண்டும் பழைய ரூபாய் நோட்டுக்கள் வழங்கப்படுவதாக பொதுமக்கள் புகார்

இந்தியாவில் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் மத்திய அரசால் திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் டிசம்பர் 2 ஆம் தேதி வரை சுங்கச்சாவடிகளில் கட்டண ரத்தை அமல்படுத்தி இருந்தது மத்திய அரசு. இந்நிலையில், தற்போது மீண்டும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் சுங்கச்சாவடிகள் பழைய ரூபாய் நோட்டுக்களை பொதுமக்களுக்கு சில்லரையாக தருவதாக புகார் எழுந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சுங்கச்சாவடிகளில் சில்லரைக்கு மீண்டும் பழைய ரூபாய் நோட்டுக்கள் வழங்கப்படுவதாக பொதுமக்கள் புகார்

இன்றைய தினம் சுங்கச்சாவடிகள் வழக்கம்போல் பொதுமக்களிடம் கட்டணங்களை வசூலிக்கத் தொடங்கிய நிலையில் சில சுங்கச்சாவடிகளில் பொதுமக்களுக்கு சில்லரையாக பழைய செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை தருவதாக வாகன ஓட்டிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இன்று காலை சென்னை - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் பொதுமக்களுக்கு பழைய ரூபாய் நோட்டுக்களை சுங்கச்சாவடி நிர்வாகம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

செல்லாத நோட்டுக்களை சில்லரையாக தரும் சுங்கச்சாவடிகள்; பொதுமக்கள் அதிருப்தி (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பொதுமக்களுக்கு மீண்டும் வழங்கப்படும் பழைய ரூபாய் நோட்டுக்கள்

இதனால், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாகனங்கள் விரைவாக செல்ல முடியாமல் தேங்கியதால், வாகன நெரிசலும் ஏற்பட்டது.

.சில்லரை இல்லாத காரணத்தால் பழைய நோட்டுக்களை வழங்குவதாக சுங்கச்சாவடி நிர்வாகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய தலைப்புகள்