விரைவில் வருகிறது புதிய 20, 50 ரூபாய் நோட்டுக்கள்

மகாத்மா காந்தி புகைப்படம் தாங்கிய ரூபாய் நோட்டு வரிசையில் புதிய 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுக்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது.

படத்தின் காப்புரிமை Bloomberg
Image caption விரைவில் வருகிறது புதிய 20, 50 ரூபாய் நோட்டுக்கள்

கடந்த மாதம் நவம்பர் 8 ஆம் தேதியன்று இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோதி அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து, நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது.

இச்சூழலில், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலின் கையெழுத்தை தாங்கிய புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்பட்டன.

தற்போது, மகாத்மா காந்தியின் புகைப்படங்கள் கொண்டு ரூபாய் நோட்டு வரிசையில் புதிய 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுக்கள் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட உள்ளன.

புதிய 50 மற்றும் 20 ரூபாய் நோட்டில் ஆளுநர் உர்ஜித் படேலின் கையெழுத்து இடம் பெறுகிறது.

மேலும், 50 ரூபாய் நோட்டில் எண்கள் வரிசையில் இடம்பெற்றிருக்கும் எழுத்து இந்த புதிய நோட்டுக்களில் இடம்பெறாது. மற்றப்படி, பழைய 50 ரூபாய் நோட்டுக்களிலிருந்த அதே பாதுகாப்பு அம்சங்கள் இதிலும் இருக்கும்.

புதிய 20 ரூபாய் நோட்டில் உள்ள இரு வரிசை எண்கள் பகுதியிலும் 'எல்' என்ற எழுத்தும், ஆளுநர் உர்ஜித் படேலின் கையெழுத்தும் இடம் பெற்றிருக்கும்.

தொடர்புடைய தலைப்புகள்