அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: மாற்றுத் திட்டம் குறித்து ஆலோசனை?

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.அதில், அமைச்சர்கள் மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

முதல்வரின் தற்போதைய உடல்நிலை குறித்து எம்.எல்.ஏ.க்களுக்கு விளக்கப்பட்டதாகவும், கட்சி மற்றும் ஆட்சி ரீதியாக அடுத்து எந்த மாதிரியான முன்னெடுப்புக்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்றும் விவரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டால், அடுத்த முதலமைச்சராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில், ஏற்கெனவே இடைக்கால முதல்வராக அனுபவம் பெற்ற ஓ. பன்னீர் செல்வத்துக்கு வாய்ப்பளிக்கலாமா என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அதே நேரத்தில், அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தங்கமணி ஆகியோரது பெயர்களும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், பன்னீர் செல்வத்துக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் தலைமைப் பதவியைப் பொருத்தவரை, இன்னும் தெளிவான முடிவு எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகளும் கவனிக்கப்படுவதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

காணொளி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஜெயலலிதாவுக்கு அவசர சிகிச்சை: டிசம்பர் 5 ஆம் தேதி அதிகாலை அப்போலோ நிலவரம்

மேலும் செய்திகளுக்கு

ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து சிறப்பு மருத்துவர் குழு

அதிமுக எம்.எல்.ஏ.க்களின் அவசரக் கூட்டம்

ஜெயலலிதா நலம் பெற தொண்டர்களின் தொடர் பிரார்த்தனை (புகைப்படத் தொகுப்பு)

ஜெயலலிதா உடல்நலம் : கால அட்டவணை

காவல் துறையினர் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப தமிழக டிஜிபி உத்தரவு.