ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து சிறப்பு மருத்துவர் குழு

ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்து அப்போலோ மருத்துவமனையுடன் தொடர்பில் இருப்பதாகவும் டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக (எய்ம்ஸ்) மருத்துவமனையிலிருந்து இதய நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழு ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சர் தெரிவித்ததாக ஏஎன்ஐ செய்தி முகமைதெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்றிரவு மாரடைப்பு ஏற்பட்டது;

அதனை தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும் என்று பல தலைவர்கள் விருப்பம் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அவர் சிகிச்சை பெற்றுவரும் அப்போலோ மருத்துவமனையுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து இதய நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழு அனுப்பப்பட்டுள்ளது என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி நட்டா தெரிவித்துள்ளார்.

மேலும் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் மற்றும் இல.கணேசன் எம்.பி. ஆகியோர் அப்போலோ மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதாவின் உடன் நலம் குறித்து விசாரித்தனர்.

தொடர்புடைய தலைப்புகள்