ஜெயலலிதா உடல்நலம் : கால அட்டவணை

சென்னை கிரிம்ஸ் சாலையில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் செப்டம்பர் 22 ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டது முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரையில்அவரது உடல் நலம் பற்றிய கால அட்டவணை.

முதல்வர் ஜெயலிதாவுக்கு டிசம்பர் 4 ஆம் தேதி மாலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக அப்போலோ தெரிவித்துள்ளது.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், இருதயவியல் நிபுணர்கள், நுரையீரல் நிபுணர்கள், தீவிர சிகிச்சை நிபுணர்கள் அவரது உடல் நிலையைக் கண்காணித்து வருவதாகவும் அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது