ஜெயலலிதா மறைவு : 7 நாட்கள் அரசு முறைத் துக்கம்

தமிழக முதலைமைச்சர் ஜெயலலிதா இறந்துள்ள நிலையில் தமிழகத்தில் ஒரு வாரம் அரசு முறைத் துக்கம் அனுசரிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Image caption ஜெயலலிதா மறைவு : 7 நாட்கள் அரசு முறைத் துக்கம்

அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகள், விழாக்கள் எதுவும் நடைபெறாது. மேலும், தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.

மேலும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக செவ்வாய் கிழமை (06.12.16) முதல் வியாழக்கிழமை (08.12.16) வரை தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தலைமை பள்ளி கல்வித்துறை செயலாளர் சபிதா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்