பொது மக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் ஜெ., உடல்

டிசம்பர் 5-ஆம் தேதியன்று (திங்கள் கிழமை) காலமான தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் பொது மக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

சுமார் இரண்டரை மாதங்கள் சென்னை கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா டிசம்பர் 5 ஆம் நாள் இரவு 11. 30 மணிக்கு காலமானார்.

பின்னர், ஜெயலலிதாவுடைய பூதவுடல் மருத்துவமனையில் இருந்து போயஸ் தோட்டத்தில் இருக்கும் அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது.

இந்நிலையில், டிசம்பர் 6-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் போயஸ் தோட்டத்திலிருந்து பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்துக்கு கொண்டு வரப்பட்டது.

ஜெயலலிதாவின் பூதவுடலின் மீது அதிமுக கட்சி கொடியும், அதற்கு மேலே இந்திய தேசிய மூவர்ணக் கொடியும் போர்த்தப்பட்டிருந்தது.

ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி அரங்கத்தில், அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கூடியுள்ளனர்.

இது தொடர்புடைய மேலும் பல செய்திகளை தெரிந்து கொள்ள :

ஜெ., உடலுக்கு மு.க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி

முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை ஜெயலலிதாவுக்கு இறுதி சடங்கு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
தடைகளைப் படிக்கல்லாக்கிய அசாதாரணமான வாழ்க்கை - ஜெயலலிதா பற்றி எழுத்தாளர் வாஸந்தி

ஜெயலலிதா மறைவுக்கு ஒரு நாள் தேசிய துக்கம்

குறைந்த வயதிலேயே ஜெயலலிதா மறைந்து விட்டார்: கருணாநிதி இரங்கல்

தலைவர்களுடன் ஜெயலலிதா: அரிய புகைப்படங்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
தழுதழுத்த குரலில் பதவியேற்று கொண்ட ஓ.பன்னீர்செல்வம்

'அசாத்திய ஆளுமை, எண்ணற்ற போராட்டங்கள்': ஜெயலலிதா குறித்த நினைவலைகள்

'மக்களால் நான், மக்களுக்காக நான்'

ஜெயலலிதா மறைவுக்கு ஒரு நாள் தேசிய துக்கம்

முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை ஜெயலலிதாவுக்கு இறுதி சடங்கு

தொடர்புடைய தலைப்புகள்