ஜெயலலிதா பூதவுடலுக்கு பிரணாப், ராகுல் அஞ்சலி

சென்னை ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உடலுக்கு இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியும், இந்திய காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தியும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

டிசம்பர் 5-ஆம் தேதியன்று (திங்கள் கிழமை) இரவு 11.30 மணிக்கு காலமான தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் பொது மக்களின் இறுதி அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக ராஜாஜி அரங்கம் வந்தடைந்த இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியும், ராகுல் காந்தியும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மாலையில் மெரீனாவில் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்கு மக்கள் குவிந்து வருகின்றனர்.