ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி அரங்கில் இருந்து மெரினா கடற்கரைக்கு கொண்டு செல்வதற்கான இறுதி ஊர்வலம் தொடங்கியது.

படத்தின் காப்புரிமை Getty Images

அவரது உடல் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி பெட்டி பீரங்கி வண்டியில் ராணுவ படையினரின் காவலுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட, அந்த வண்டியில் உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், தமிழத்தின் புதிய முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஆகியோர் அதில் இருந்தனர்

ராஜாஜி அரங்கத்தில் இருந்து அந்த வண்டி செல்லும் வழியில் லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோதி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி, தமிழக தலைவர்கள், திரைப்பட துறையினர், தென் இந்திய அரசியல் தலைவர்கள், ஆகியோர் மரியாதை செலுத்தினர்.