சிந்து நதி உடன்படிக்கை : இந்தியா - பாகிஸ்தான் இடையே தொடரும் சிக்கல்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே உள்ள 6 ஆறுகளின் நீரை பகிர்ந்து கொள்ளுவது தொடர்பான இந்தியா உடனான ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாகிஸ்தான் வலியுறுத்தி உள்ளது.

படத்தின் காப்புரிமை Daniel Berehulak
Image caption சிந்து நதி உடன்படிக்கை : இந்தியா - பாகிஸ்தான் இடையே தொடரும் சிக்கல்

இந்த ஒப்பந்தம் முற்று முழுதாக மதிக்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் எதிர்பார்ப்பதாக அந்நாட்டு பிரதமரின் பேச்சாளர் டாரிக் ஃபடெமி 'டான்' நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார்.

1960 ஆம் ஆண்டில் கையெழுத்தான சிந்து நதி உடன்படிக்கை தொடர்பாக நிலுவையில் உள்ள சர்ச்சை போதுமான நேரம் கிடைக்கும் பட்சத்தில் சர்வதேச அளவிலான தலையீடுகள் இல்லாமல் இரு தரப்பும் பேசி சமூகமாக தீர்த்துக் கொள்ள முடியும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பேச்சாளர் விகாஸ் ஸ்வரூப் கருத்து தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் இந்த கருத்து வெளிவந்துள்ளது.

புதிய அணைகள் கட்டுவதன் மூலம் இந்த உடன்படிக்கையை இந்தியா மீறியிருப்பதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்