ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது : பிரதமரிடம் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டியும் நாடாளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவின் முழு வெண்கல சிலை அமைக்கக் கோரியும் பிரதமர் நரேந்திர மோதியை நேரில் சந்தித்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை @AIADMKOfficial
Image caption மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத் ரத்னா விருது : பிரதமரிடம் பன்னீர் செல்வம் கோரிக்கை

தமிழக முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 5-ஆம் தேதி மாரடைப்பு காரணமாக காலமானார். அதனைத்தொடர்ந்து, புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார்.

இச்சூழலில், கடந்த 12 ஆம் தேதியன்று சென்னை அருகே கரை கடந்த வர்தா புயல் தமிழகத்தின் தலைநகரை புரட்டிப்போட்டது. பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன.

ஜெயலலிதா குறித்த செய்திகளுக்கு :

ஜெயலலிதாவின் சொத்துக்கள் யாருக்குச் சொந்தம்?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் உண்மையில் நடந்தது என்ன? பொன்னையன் பேட்டி

மீட்புப்பணிகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தலைநகர் தில்லியில் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்து பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

22,573 கோடி ரூபாய்க்கு சேதம்

பிரதமரை சந்தித்தபிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், வர்தா புயல் ஏற்படுத்திய சேதங்களுக்கு நிவாரண தொகையாக 22,573 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா சிலை

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலிதாவின் சேவைகளை நினைவு கூறுகின்ற வகையில் மிக உயரிய விருதான பாரத் ரத்னா விருது வழங்கவேண்டி கேட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற வளாகத்தில் அம்மாவின் முழு உருவ வெண்கலச் சிலை வைக்க நிறுவ வேண்டி கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி, காவிரி நதிநீர் ஆணையம் , காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பிரதமரிடம் முன்வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

வார்தா புயல் பாதிப்பை சமாளிக்க தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தற்போது எந்தவொரு விமர்சனமும் எழுவதற்கு வாய்ப்பில்லாமல் போனதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

திரைத் துறையிலிருந்து அரசியலில் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டிய ஜெயலலிதா

தொடர்புடைய தலைப்புகள்