ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த தலைவர்களுக்கு சசிகலா நன்றி கடிதம்

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்த இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோதி மற்றும் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து, ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோதிக்கு சசிகலா எழுதியுள்ள கடிதத்தில், தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைந்த வேளையில், தனக்கும், தமிழக மக்களுக்கும் தனிப்பட்ட முறையில் ஆறுதல் தெரிவித்ததாக நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் சொத்துக்கள் யாருக்குச் சொந்தம்?

இதே போல், குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஜெயலலிதாவின் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நேரில் வந்ததற்காகவும், துயரில் வாடிய தனக்கும், தமிழக மக்களுக்கும் ஆறுதல் தெரிவித்ததற்காகவும் தான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாக சசிகலா குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்