'டிசம்பர் 23-ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புகிறார் கருணாநிதி'

உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதி, வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர் 23-ஆம் தேதி )வீடு திரும்புவார் என அவரது மகனும், திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Image caption டிசம்பர் 23-ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புகிறார் கருணாநிதி'

திமுக தலைவர் கருணாநிதி கடந்த டிசம்பர் 15-ஆம் தேதியன்று மூச்சுத் திணறல், தொண்டை மற்றும் நுரையீரலில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக சென்னையிலுள்ள காவிரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவர் மூச்சு விடுவதை எளிதாக்குவதற்காக ட்ராக்யோஸ்டமி எனப்படும் சிகிச்சையும் செய்யப்பட்டது.

இந்நிலையில், அவர் வரும் வெள்ளிக்கிழமையன்று, அதாவது டிசம்பர் 23-ஆம் தேதியன்று வீடு திரும்புவார் என மு.க. ஸ்டாலின் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி முதலே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதி, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வந்தார். அதன் பிறகு கடந்த டிசம்பர் 1-ஆம் தேதியன்று ஊட்டச் சத்துக் குறைபாட்டின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கருணாநிதி, 7-ஆம் தேதியன்று வீடு திரும்பினார்.

தொடர்புடைய தலைப்புகள்