1.63 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பிடிபட்டன

தூத்துக்குடி துறைமுகத்தில் கள்ளத்தனமாக இறக்குமதி செய்யப்பட்ட 1.63 கோடி ரூபாய் மதிப்பிலான 12 லட்சம் சிகரெட்டுகளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜெபெல் அலி துறைமுகத்திலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த கண்டெய்னர்களில் இந்த சிகரெட்டுகள் இருந்தன.

ஏ - 4 அளவுள்ள வெள்ளை காகிதங்கள் இறக்குமதி செய்யப்படுவதாக கூறி, கொண்டுவரப்பட்ட 20 அடி நீள கண்டெய்னரில் வெளிநாட்டு சிகரெட்டுகள் கள்ளத்தனமாகக் கொண்டுவரப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து இந்த சோதனையை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை மேற்கொண்டது.

Image caption 1.63 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பிடிபட்டன

சோதனையில், வெள்ளைத் தாள்களுக்குக் கீழே, 300 பெட்டிகளில் டேவிடாஃப் வகை சிகரெட்டுகளும் டன்ஹில் வகை சிகரெட்டுகளும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. கேரளாவைச் சேர்ந்த கடத்தல் கும்பல் இதனை இறக்குமதி செய்திருந்தது.

இது தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய தலைப்புகள்