சென்னையில் ஏராளமான 2000 ரூபாய் நோட்டு கட்டுகள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்திற்கு அருகில் புதிய 2000 ரூபாய் நோட்டுகளாக 1.34 கோடி ரூபாயை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை குறித்து படிக்க: தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

Image caption பறிமுதல் செய்யப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள்

தங்களுக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில், விமான நிலையத்திற்கு அருகில், ஐந்து பேரை இடைமறித்து, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அவர்களைச் சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து புதிய 2,000 ரூபாய் நோட்டுகளாக 1.34 கோடி ரூபாயைக் கைப்பற்றினர்.

Image caption பறிமுதல் செய்யப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள்

இந்தப் பணம் எப்படி கிடைத்தது என்பது குறித்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறை விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

சேகர் ரெட்டி கைது குறித்து படிக்க: தொழிலதிபர் சேகர் ரெட்டியை கைது செய்தது சிபிஐ