கிரிஜா வைத்தியநாதன்: முக்கிய தகவல்கள்

தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரைப் பற்றிய சில முக்கிய தகவல்களைப் பார்க்கலாம்.

படத்தின் காப்புரிமை GIRIJA VAIDYANATHAN FACEBOOK
Image caption சவாலான நேரத்தில் தலைமைப் பதவி
  • 1981ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான கிரிஜா வைத்தியநாதன், 1959ஆம் ஆண்டில் பிறந்தவர்.
  • தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகளின் பணி மூப்பு வரிசையில் இரண்டாவது இடத்தில் தற்போது இருக்கிறார்.
  • இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். பிறகு, சுகாதர பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார்.
  • மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார் கிரிஜா வைத்தியநாதன்.
  • 2011ஆம் ஆண்டில் சுகாதாரத் துறைச் செயலராக நியமிக்கப்பட்டார். முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மறுவடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றினார். திமுக ஆட்சிக்காலத்திலும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அமலில் இருந்தது.
  • 2007ஆம் ஆண்டில் தலைமைச் செயலாளர் அந்தஸ்தை அடைந்தார் கிரிஜா வைத்தியநாதன்.
  • பள்ளிக்கல்வித் துறை செயலராகவும் (2005-2006), மாநில திட்டக் குழுவின் உறுப்பினராகவும் (2007-2008) கிரிஜா வைத்தியநாதன் பணியாற்றியுள்ளார். விவசாயம், போக்குவரத்துத் துறைகளிலும் பதவி வகித்துள்ள கிரிஜா வைத்தியநாதன், நிர்வாகத் திறன் மிக்கவராக அறியப்பட்டவர்.
  • 2013ஆம் ஆண்டிலிருந்து நில ஆணையராகப் பணியாற்றிவரும் கிரிஜா வைத்தியநாதன், 2013ஆம் ஆண்டின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் விதிகளை வகுப்பதில் முக்கியப் பங்காற்றியவர்.

தொடர்புடைய தலைப்புகள்