இணையத்தில் ஆர்டர் கொடுத்தால் இனி ரூபாய் நோட்டும் வீடுதேடி வரும்

இந்தியாவில் உள்ள பெரிய இணைய சில்லரை வணிக நிறுவனங்களில் ஒன்று, நாட்டின் மிகவும் வேண்டப்படும் பொருளுக்கு அடுத்தப்படியாக ரூபாய் நோட்டுக்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க ஆரம்பித்துள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஸ்நாப்டீல் செயலி மூலம் வாடிக்கையாளர்கள் ரூபாய் நோட்டுக்களை ஆர்டர் செய்யலாம்

ஸ்நாப்டீல் நிறுவனமானது இரு நகரங்களில் உள்ள தனது வாடிக்கையாளர்களை ரூபாய் நோட்டுக்களை இணைய வழியாக வாங்க அனுமதிக்கிறது. பின்னர், ரூபாய் நோட்டு எடுத்துவரப்பட்ட உடன் வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி ஏ.டி.எம் அட்டை மூலம் ரூபாய் நோட்டுக்கான தொகையை வழங்கலாம்.

கடந்த மாதம், இந்திய அரசாங்கம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு தடைவிதித்தை தொடர்ந்து, நாட்டில் கடும் பண தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனை தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி வரும் நிறுவனங்களின் வரிசையில் ஸ்நாப்டீல் சமீத்தியது.

ஏ.டி.எம் முன் அணிவகுத்திருக்கும் கூட்டம் மற்றும் வங்கிகளில் பணம் எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் ரூபாய் நோட்டுக்களை பெறுவது பெரும் சவலாக உள்ளது.

ஸ்நாப் டீல் நிறுவனத்தின் செயலியை டவுன்லோட் செய்வதற்கும், ஏற்கனவே அந்த செயலியை வைத்திருக்கக்கூடிய வாடிக்கையாளர்களை ஒரே நேரத்தில் மேலும் சில பொருட்களை வாக்குவதற்கும் இது ஒரு புத்தியசாலித்தனமான வழியாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவித்த்துள்ளனர்.

கேஷ் ஆன் டெலிவரி என்ற பணம் செலுத்தும் முறை மூலம் ஸ்நாப் டீல் பெறும் தொகையை ரூபாய் நோட்டுக்களை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு முதற்கட்டமாக தர உள்ளது.

இ-காமர்ஸ் எனப்படும் மின் வணிக சேவையானது இந்தியாவில் மிகவும் பிரபலமான சேவையாகும்.

ஆனால், இந்த திட்டமானது நீண்ட நாள் நீடித்து செயல்படுவது கடினம் என்று சிலர் கருதுகின்றனர்.