மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கருணாநிதி

மூச்சுத் திணறல், தொண்டை மற்றும் நுரையீரலில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக சென்னையிலுள்ள காவிரி மருத்துவமனையில் கடந்த வாரம் வியாழக்கிழமை(டிசம்பர் 15ம் தேதி) சேர்க்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி வெள்ளியன்று மாலை வீடு திரும்பினார்.

படத்தின் காப்புரிமை Kalaignar89

அவரது வாகனம் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் இருந்து வெளியே வந்ததும், சாலையின் இரு மருங்கிலும் இருந்த அவரது தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பி வரவேற்றனர்.

கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி முதலே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதி, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வந்தார்.

அதன் பிறகு கடந்த டிசம்பர் 1-ஆம் தேதியன்று ஊட்டச் சத்துக் குறைபாட்டின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கருணாநிதி, 7-ஆம் தேதியன்று வீடு திரும்பினார்.

படத்தின் காப்புரிமை Kauvery hospital

ஆனால் மூச்சுத் திணறல் தொடர்பான பிரச்சனைக்காக மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அவர் மூச்சு விடுவதை எளிதாக்குவதற்காக ட்ராக்யோஸ்டமி எனப்படும் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் சார்பாக கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரிக்க அதிமுக எம்.பி தம்பிதுரை உட்பட, பல்வேறு கட்சித் தலைவர்களும் கருணாநிதியைச் சந்திக்க மருத்துவமனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்