முதல்வர் நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ஸ்டாலின் எச்சரிக்கை

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்திற்கு இன்னமும் காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்படுவது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை MKStalin
Image caption முதல்வர் உடனடி எடுக்கவில்லையெனில் சட்டரீதியான நடவடிக்கைகளில் இறங்குவேன் என்கிறார் ஸ்டாலின்.

இது தொடர்பாக அவர் இன்று விடுத்திருக்கும் அறிக்கையில், தமிழக காவல்துறை சி.ஐ.டி பாதுகாப்பு பிரிவின் முக்கியமான அணியைச் சேர்ந்த நன்கு பயிற்சியளிக்கப்பட்ட ஏறத்தாழ 240 பேர் இன்னமும் ஜெயலலிதாவின் வீட்டைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, ரிஸ்க் அலவன்ஸ் என பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. ஆனால், இம்மாதிரியான வசதிகள், சட்டம்-ஒழுங்கு காக்கும் பணியிலும், போக்குவரத்தை ஒழுங்கும் படுத்தும் பணியிலும் தினந்தோறும் கடுமையாகப் பணியாற்றும் காவல்துறையின் மற்ற பிரிவுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களுக்குக்கூடக் கிடைப்பதில்லை என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

போயஸ் கார்டன் இல்லத்தில், அரசியல் சட்ட ரீதியிலான அதிகாரம் படைத்த எவரும் இல்லாத நிலையில், அங்கே இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான காவலர்களும் உயரதிகாரிகளும் பாதுகாப்பு என்ற பெயரில் நியமிக்கப்பட்டிருப்பது, தற்போது அந்த இல்லத்தில் உள்ள தனிப்பட்ட நபர்களுக்கு அரசாங்கத்தின் காவலர்களை தனியார் செக்யூரிட்டிகள் போல பயன்படுத்தும் இழிவான செயல் என ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இது தொடர்பாக உடனடி எடுக்கவில்லையெனில் சட்டரீதியான நடவடிக்கைகளில் இறங்கப் போவதாக ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

மு.க.ஸ்டாலின் குறித்த மேலும் செய்திகள் :

சோதனையில் சிக்கிய புதிய ரூபாய் நோட்டுக்கள் யாருக்கு வந்தவை?

சசிகலாவை சந்தித்த துணைவேந்தர்களை பதவி நீக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்