கான்பூர் அருகே ரயில் தடம்புரண்டு விபத்து: இருவர் பலி

இன்று (புதன் கிழமை) அதிகாலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஸியால்தா - அஜ்மீர் இடையே இயக்கப்படும் விரைவு ரயிலின் 14 பெட்டிகள் கான்பூர் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

படத்தின் காப்புரிமை NAVNEET JAISWAL
Image caption தடம்புரண்ட ரயில்

இந்த ரயில் விபத்தில் இருவர் இறந்துள்ளனர் என கான்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஜகி அகமது தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த ரயில் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

விபத்து ஏற்பட்டவுடன் மீட்புக்குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை NAVNEET JAISWAL
Image caption சம்பவ இடத்துக்கு மீட்புக் குழுக்கள் விரைந்துள்ளன

கான்பூரிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள, ரூரா-மேதா பகுதியில் சென்று கொண்டிருந்த ஸியால்தா - அஜ்மீர் விரைவு ரயில் ( ரயில் எண் 12987) காலை 5 20 மணிக்கு தடம் புரண்டுள்ளது என்று மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Ministry of Railways TWITTER

விபத்து குறித்து முழு விசாரணை மேற்கொள்ளப்படும் என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். இந்த ரயில் விபத்துக்கான அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக் காலத்தில், இப்பகுதியில்நடக்கும் இரண்டாவது ரெயில் விபத்து இதுவாகும். கடந்த நவம்பர் மாதத்தில், இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி கான்பூர் அருகே தடம் புரண்டதில் , 128 பேர் இறந்தனர்.

தொடர்புடைய தலைப்புகள்