ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு அறிவிக்கக் கோரி அ.தி.மு.க பொதுக்குழுவில் தீர்மானம்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை தேசிய விவசாயிகள் தினமாக அறிவிக்கவும், அவருடைய சேவையை கருத்தில் கொண்டு ரமோன் மகசேசே விருது மற்றும் உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என அ.தி.மு.கபொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இன்று (வியாழக்கிழமை) காலை சென்னையில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் கட்சியின் பொதுக்குழு தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிமுக பொதுச் செயலாளராக வி.கே. சசிகலா நியமனம்

அதில் இரு தீர்மானங்களில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை தேசிய விவசாயிகள் தினம் என்று அறிவிக்கவும், நாடாளுமன்றத்தில் முதல்வரின் வெண்கலச் சிலையை நிறுவ மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மற்றொரு தீர்மானத்தில், மானுட சேவைக்கான பிலிப்பின்ஸ் நாட்டின் ரமோன் மகசேசே விருது மற்றும் உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
நிழல் நிஜமானது : அ.தி.மு.கவின் புதிய பொது செயலாளர் சசிகலா (காணொளி)

தொடர்புடைய தலைப்புகள்