சமாஜ்வாதி கட்சியில் தொடரும் மோதல்: ராம்கோபால் யாதவ் மீண்டும் நீக்கம்

சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ராம்கோபால் யாதவ் அக்கட்சியிலிருந்து மீண்டும் நீக்கப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ராம்கோபால் யாதவை கட்சியில் இருந்து நீக்கினார் முலாயம் சிங் யாதவ்

ராம்கோபால் யாதவை கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கும் அறிவிப்பை வெளியிட்ட சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவர் முலாயம் சிங் யாதவ், இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த சமாஜ்வாதி கட்சியின் தேசிய மாநாடு அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் தெரிவித்துள்ளார்.

இன்று நடந்த மாநாடு கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானது என்று தெரிவித்த முலாயம் சிங் யாதவ், இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், சமாஜ்வாதி கட்சியின் தேசிய மாநாடு வரும் 5-ஆம் தேதியன்று (வியாழக்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இன்று நடந்த சமாஜ்வாதி கட்சி மாநாட்டில், அக்கட்சியின் மாநில தலைவர் பதவியிலிருந்து ஷிவ்பால் யாதவ் நீக்கப்பட்டார். மேலும், கட்சியின் மூத்த தலைவர் அமர்சிங்கையும் நீக்கம் செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் முலாயம் சிங் யாதவ் மற்றும் ஷிவ்பால் யாதவ் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இன்றைய கூட்டத்தில், சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு பதிலாக அப்பதவியில் உ .பி மாநில முதல்வரான அகிலேஷ் யாதவ் நியமிக்கப்பட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ராம்கோபால் யாதவ் மீண்டும் நீக்கம்

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமையன்று உத்தர பிரதேச மாநில முதல்வரான அகிலேஷ் யாதவை சமாஜ்வாதி கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். ஆனால், அதற்கு அடுத்த நாளே, அகிலேஷை முலாயம் சிங் யாதவ் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டார்.

இந்நிலையில், இன்று நடந்த கூட்டத்தில் அகிலேஷ் தரப்பால் ஷிவ்பால் நீக்கப்பட்டிருப்பதும், பின்னர் சமாஜ்வாதி கட்சியில் இருந்து ராம்கோபால் யாதவ் நீக்கப்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்