பாரதிய ஜனதா வெற்றி பெற்றால் உத்தரப் பிரதேசம் வளர்ச்சி பெறும் - பிரதமர் பேச்சு

இந்தியாவில் மக்கள்தொகை அதிகமாக உள்ள உத்தரப் பிரதேசத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெற்றால், இந்த மாநிலம் வளர்ச்சியடைய ஆவன செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோதி உறுதி அளித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

தன்னுடைய அரசியல் வரலாற்றிலேயே அதிக மக்கள் கலந்து கொண்டதாக மோதி கூறிய, பல லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற பேரணியில் உரையாற்றியபோது, அந்த மாநிலத்தின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை மோதி கடுமையாக விமர்சித்தார்.

எதிர்க்கட்சிகள் பிரதமர் பதவியிலிருந்து தன்னை அகற்றுவதில் அக்கறை காட்டுவதாகவும், தானோ ஊழலை ஒழிப்பதில் கவனம் செலுத்துவதாகக் கூறி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாதவையாக அறிவித்ததை ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையின் ஓர் அம்சமாக அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய தலைப்புகள்