'பதவியாக அல்ல பொறுப்பாகத் தான் செயல் தலைவர் தேர்வை ஏற்கிறேன்'

திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு. க. ஸ்டாலின், கனத்த இதயத்துடன் செயல் தலைவர் பொறுப்பை ஏற்பதாக தெரிவித்தார்.

Image caption பதவியாக அல்ல பொறுப்பாக செயல் தலைவர் தேர்வை ஏற்கிறேன்: மு. க. ஸ்டாலின்

இன்று ஜனவரி 4-ஆம் தேதியன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்ததிமுக பொதுக் குழுக்கூட்டத்தில்பொதுக்குழு கூட்டத்தில் மு. க. ஸ்டாலின் ஏற்புரை வழங்கிய போது, ''தற்போது திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை இருக்கும் சூழலில், எனக்கு இந்த செயல் தேர்வு தேர்வு பெரிதாக எந்த மகிழ்ச்சியையும் அளிக்கவில்லை'' என்று தெரிவித்தார்.

கட்சியில் வட்டப் பிரதிநிதி, பகுதி பிரதிநிதி , மாவட்டப் பிரதிநிதி என்று படிப்படியாக தான் வளர்ந்து வந்ததாக தெரிவித்த மு. க. ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதிக்கு துணை நிற்கும் வழியில் தனது கட்சிப் பணி அமையும் என்று கூறினார்.

மேலும் ஸ்டாலின் கூறுகையில், '' பள்ளிப் பருவம் முதலே எனக்கு கட்சி பணியில் ஆர்வம் இருந்தது. திமுக தலைவர் கருணாநிதியின் செயல்பாடுகளை கண்டே எனக்கும் கட்சி பணியில் ஈடுபாடு வந்தது'' என்று குறிப்பிட்டார்.

''செயல் தலைவர் பதவியை நான் ஒரு பொறுப்பாகத் தான் ஏற்கிறேன். பதவியாக இல்லை'' என்றும் ஸ்டாலின் தான் வழங்கிய ஏற்புரையில் தெரிவித்தார்.

தொடர்புடைய தலைப்புகள்