சென்னையின் பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை

சென்னையில் பத்து இடங்கள் உட்பட நாடு முழுவதும் சுமார் 70 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்திவருகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

சென்னை, ஹைதராபாத், பெங்களூர் ஆகிய இடங்களில் அலுவலகங்களைக் கொண்டிருக்கும் புஹாரி குழும நிறுவனங்கள், ஈடிஏ நிறுவன அலுவலகங்களில் இந்த சோதனைகள் நடைபெற்றுவருகின்றன.

தங்க விற்பனை, ரியல் எஸ்டேட், கட்டுமானம், அனல் மின் நிலையம் போன்ற தொழில்களில் புஹாரி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஈடிஏ நிறுவனமும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுவருகிறது.

கீழக்கரை, தூத்துக்குடியில் உள்ள ஈடிஏவின் அலுவலகங்கள், சென்னைக்கு அருகில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி, ஒரு வர்த்தக வளாகம் ஆகியவற்றிலும் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த இடங்களில் ஏதாவது கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை.