வெளிநாட்டு இந்தியருக்கு புதிய சலுகை - மோதி உறுதி

வெளிநாடு வாழ் இந்திய குடியுரிமை பெறுவதற்கு இந்திய வம்சாவளி ஒப்பந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு எளிய வழிமுறைகளை அரசு உருவாக்கும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

விசா இல்லாமல் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் சலுகைகளுடன் இருக்கும் இத்தகைய தகுநிலை, இந்தியாவில் பிறந்ததற்கு உறுதியான ஆவண சான்றுகள் வைத்திருப்போருக்கு மட்டுமே தற்போது வழங்கப்படுகிறது.

1830-களில் இருந்து 1917 ஆம் ஆண்டு வரையான காலக்கட்டத்தில் 2 மில்லியன் இந்தியர்கள் பிரிட்டிஷ் காலனி நாடுகளாக இருந்த மொரீஷியஸ், ஃபிஜி, டிரினிடாட் மற்றும் தென்னாப்ரிக்காவுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கடல்கடந்து சென்றனர் அல்லது அடிமை நிலை ஒழிக்கப்பட்டதை தொடர்ந்து ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரிய சென்றனர்.