கடத்தபடவிருந்த 6,400 நன்னீர் ஆமைகள் பறிமுதல்

இந்தியாவின் கொல்கொத்தா துறைமுகத்திற்கு கடத்தப்படவிருந்த 6,400 நன்னீர் ஆமைகளை இந்திய போலீஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

மிகப் பெரிய அளவில் வன உயிரினத்தை கைப்பற்றும் நடவடிக்கை இது என்று இந்த நிகழ்வு கருதப்படுகிறது.

உத்தரபிரதேச மாவட்டத்தின் அமேதி பகுதியில் மூட்டைகளில், சுமார் நான்கு டன்னுக்கும் அதிகமான எடை கொண்ட உயிருள்ள ஃப்லேப்ஷெல் (Flapshell) ஆமைகள் வைக்கப்பட்டிருந்தன.

இந்த ஆமைகள் கங்கை பள்ளத்தாக்கு பகுதிகளில் இருந்து பிடிக்கப்பட்ட ஆமைகள் என்றும் இது தொடர்பாக ஒரு நபர் கைதாகியுள்ளார் மற்றும் அவர் ஆமைகளைக் கடத்தும் ஒரு பெரிய கடத்தல் வலையமைப்புடன் சம்பந்தப்பட்டவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஃப்லேப்ஷெல் வகை ஆமைகள் அருகிவரும் இனம் இல்லை என்றாலும் இந்த ஆமைகளின் இறைச்சி மற்றும் ஓடுகளுக்காக, அதிக அளவில் பங்களாதேஷ், சீனா மற்றும் தென் கிழக்கு ஆசியாவுக்கு இவை கடத்தப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இன ஆமைகள் ஆறுகளில் உள்ள இறந்த விலங்குகளின் துண்டுகளை உண்பதால், இவை இந்திய ஆறுகள் சுத்தப்படுத்தவும் உதவுகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க: பிபிசி தமிழ் பேஸ்புக்

ட்விட்டரில் எங்களை பின்தொடர :: பிபிசி தமிழ் டிவிட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யூ ட்யூபில் காண ; பிபிசி தமிழ் யு டியூப்