காதித் துறை காலண்டரில் காந்தி படத்திற்கு பதிலாக மோதி: தொழிலாளர்கள் எதிர்ப்பு

காதி மற்றும் கிராம தொழில் துறை ஆணையத்தின் (கேவிடிசி) அதிகாரப்பூர்வ நாள்காட்டியில் இருக்கும் மகாத்மா காந்தியின் புகைப்படங்களை மாற்றிவிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் புகைப்படங்களை அச்சிடும் தீர்மானத்திற்கு இந்திய அரசு துறை ஒன்றை சேர்ந்த தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption யாரும் காந்தியின் இடத்தை பெற்றுவிட முயாது என்று எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தீர்மானத்தால் தாங்கள் கவலை அடைவதாக காதி மற்றும் கிராம தொழில் துறை ஆணையத்தின் (கேவிடிசி) தொழிலாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

காந்தி தீவிரமாக போற்றி வளர்த்த கிராம நிலையிலான தொழில் துறைக்கு இந்த ஆணையம் ஆதரவு அளித்து வருகிறது.

நரேந்திர மோதியும் கிராம தொழில் துறை நிறுவனங்களுக்கு பெரியதொரு ஆதரவாளராக இருப்பதால் அவருடைய புகைப்படங்களை அச்சிட முடிவு செய்ததாக காதி மற்றும் கிராம தொழில் துறை ஆணையம் கூறியிருக்கிறது.

சர்ச்சிலோடு சேர்ந்து நிற்கப்போகிறார் காந்தி

காந்தியின் புகைப்படங்களை தன்னுடைய அதிகாரப்பூர்வ நாள்காட்டியிலும், விற்பனை பொருட்களிலும் இந்த ஆணையம் பாரம்பரியமாக பயன்படுத்தி வருகிறது.

மகாத்மா காந்தியின் புகைப்படம் மாற்றபடாது என்ற அறிவிப்பு வெளியான பின்னரும், இந்த ஆண்டு மகாத்மா காந்தியின் படங்களை அச்சிட வேண்டாம் என்ற முடிவு மக்களின் கோபத்தை தூண்டியுள்ளது.

காதி மற்றும் கிராம தொழில் துறை ஆணையத் தொழிலாளர்கள் வியாழக்கிழமை புதிய விற்பனை பொருட்களை வாங்க மறுத்ததோடு, மும்பையிலுள்ள அதன் தலைமையகத்தில் மௌனப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கிராமபுற தொழில் துறையை வளர்ப்பதாக காந்தியின் தத்துவங்கள் அமைந்தன Gandhi's philosophy was centred around promoting village industries

"நாங்கள் மோதியின் படத்தை குறிப்பேடுகளிலோ, நாள்காட்டியிலோ அச்சிட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், மகாத்மா காந்தியின் படம் அதில் இல்லாததை பார்த்து கவலை அடைந்துள்ளோம். காந்தியின் படம் இடம்பெற ஏன் இடம் ஒதுக்கப்படவில்லை? என்று எங்களுக்கு தெரிய வேண்டும். காதி தொழில் துறைக்கு காந்தி இனிமேல் பொருத்தமில்லையா? என்று ஒரு ஊழியர் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஆனால், பழைய பாணியிலான ராட்டையில் மகாத்மா காந்தி நூல் சுற்றுவதைபோல, மோதி அமர்ந்து நூல் சுற்றுகின்ற புகைப்படம் வெளியிட்டிருப்பதை காதி மற்றும் கிராம தொழில் துறை ஆணையம் நியாயப்படுத்தியுள்ளது.

காந்தி: அபூர்வ புகைப்படங்கள்

"காதி தொழில் துறை முற்றிலும் காந்தியின் தத்துவம், கருத்துக்கள் மற்றும் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. காந்தி தான் காதி மற்றும் கிராம தொழில் துறை ஆணையத்தின் ஆன்மா. எனவே அவரை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவதற்கு வாய்ப்பேயில்லை” என்று காதி மற்றும் கிராம தொழில் துறை ஆணையத்தின் தலைவர் வினாய் சக்சேனா தெரிவித்தாக ஐஎஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

“நரோந்திர மோதி காதி (கைவினை)) ஆடைகளின் மிக பெரிய வணிக தூதராக இருப்பதால், அவருடைய புகைப்படங்களை தெரிவு செய்தோம்” சாக்சேனா கூறியுள்ளார்.

"மேக் இன் இந்தியா" திட்டத்தின் மூலம் கிராமங்களை தன்னிறைவு அடைய செய்கின்ற மோதியின் தொலைநோக்கு பார்வை, கிராம தொழில் துறை ஆணையத்திற்கு ஒத்தாக இருக்கிறது" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தானும் கிராம மற்றும் கைவினைத் தொழில் துறையின் ஆதரவாளர் என்கிறார் மோதி

"அதிகாரபூர்வ விற்பனை பொருட்களில் காந்தியின் புகைப்படங்களை அச்சிடாமல் விட்டிருப்பது இது முதல் முறையல்ல" என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளையில் "இந்த விடயத்தை ஆய்வு செய்ய இருப்பதாக" சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் கால்ராஜ் மிஷ்ரா கூறியிருக்கிறார்.

மோதி அல்லது யாருடைய புகைப்படம் காந்தியின் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பது இங்கு கேள்வியல்ல. ஆனால், மோதி பிரதமராக பதவியேற்றது முதல் காதி ஆடைகளின் விற்பனைக்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டதை மறுத்துவிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனில் ஏலத்துக்கு வரும் மகாத்மா காந்தி நினைவுப் பொருட்கள்

இந்த விடயம் தொடர்பாக மோதியின் அரசியல் எதிரணியினர் அவரை விமர்சித்துள்ளனர்.

காந்தியை போல ஆக வேண்டும் என்றால் ஒரு ஆயுள் காலத்திற்கு மேலேயே வேண்டும்" என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டர் பதிவிட்டுள்ளார்.

“ராட்டையில் நூல் சுற்றுவதைபோல புகைப்படம் எடுத்து கொண்டால் மட்டுமே ஒருவர் காந்தியாகிவிட முடியாது. அவ்வாறு படம் எடுக்கிறவர், நகைச்சுவைக்கு மட்டுமே காரணமாகலாம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்