முதல்வருக்கு பொங்கல் வாழ்த்து சொன்ன ஸ்டாலின்

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள், பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை தொலைபேசி வாயிலாக தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை TWITTER

இதை அவர் தனது முகநூல் மற்றும் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

''66 வது பிறந்த நாள் காணும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளும், பொங்கல் திருநாள் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளையும் தொலைபேசியில் தெரிவித்தேன். அவருடைய பொது வாழ்வு சிறக்கவும், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்றவும் வாழ்த்தினேன்,'' என்று பதிவிட்டுள்ளார்.

டிசம்பர் மாதம் மறைந்த முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் உடல் இறுதி அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த போது, பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.

இதை அடுத்து, திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அதிமுக கட்சியினர் உடல் நலம் விசாரிக்க வந்திருந்தனர்.

சசிகலா முதல்வராக வேண்டுமென தம்பிதுரை விடுத்த அறிக்கை வெட்கக்கேடானது: மு.க. ஸ்டாலின்

உண்மைக்கு மாறான தகவல்களை பேசுகிறார் மு.க. ஸ்டாலின்: சசிகலா குற்றச்சாட்டு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யூ ட்யூபில் காண ; பிபிசி தமிழ் யு டியூப்