வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழக விவசாயிகள் (புகைப்படத் தொகுப்பு )

தமிழக விவசாயிகள் கடுமையான வறட்சியை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்கள் அனுபவித்து வரும் இன்னல்களை நேரடியாக களத்திற்கு சென்று பதிவு செய்துள்ளார் எமது செய்தியாளர் முரளிதரன்.

Image caption தமிழகம் முழுவதும் சராசரியாக 62 சதவீதம் அளவுக்குக் குறைவாக பெய்த மழை, கடலூர், நாமக்கல் மாவட்டங்களில் 80 சதவீதம் அளவுக்குக் குறைவாகப் பெய்தது.
Image caption வறண்டு புதர் மண்டிக் கிடக்கும் வீராணம் ஏரி
Image caption காவிரி நீர் உரிய காலத்தில் திறக்கப்படாததால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே குறுவைப் பயிர்களைச் சாகுபடி செய்வது பாதிக்கப்பட்டிருந்தது.
Image caption காவிரியிலிருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீரில் சுமார் 76 டிஎம்சி தண்ணீர் வரவில்லை
Image caption தொலைவிலிருந்து நிலங்களுக்கு பைப் மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
Image caption டெல்டா பகுதியில் சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி நீரை நம்பியிருக்கின்றன.
Image caption லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் இந்த ஆண்டு வேலையில்லாமல் தவித்து வருகிறார்கள்.
Image caption ஏக்கருக்கு சுமார் 5 ஆயிரம் ரூபாய் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடாக அறிவித்துள்ளது தமிழக அரசு
Image caption வறண்டு கிடக்கும் கால்வாய்
Image caption இந்த காலகட்டத்தில் இப்பகுதி விவசாயிகள் நெல் அறுவடையை முடித்துவிட்டு உளுந்து விதைப்பைத் துவங்கியிருப்பார்கள்.
Image caption தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் பாதி வரை வந்த பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருக ஆரம்பித்துள்ளன.
Image caption தமிழ்நாட்டின் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றான வீராணம் ஏரியை நம்பியிருந்த 48 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்த விவசாயிகள் தற்போது பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

வறட்சியால் இலங்கையில் களை இழந்த பொங்கல் பண்டிகை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யூ ட்யூபில் காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்