'நாளை முதல் ஏடிஎம்களில் 10, 000 ரூபாய் எடுக்கலாம்'

நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் ஏடிஎம்களில் ஒரு நாளைக்கு 10, 000 ரூபாய் வரை எடுக்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption 'இனி ஏடிஎம்களில் 10, 000 ரூபாய் எடுக்கலாம்'

மேலும், நடப்பு வங்கிக் கணக்கில் ( Current Account) இது வரை 50 ஆயிரம் வரை எடுக்கலாம் என்பதை வாரம் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் எடுக்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது.

ஆனால், ஒரு வாரத்தில் வங்கியில் சேமிப்புக் கணக்கில் இருந்து ( Savings Account) 24,000 ரூபாய் எடுக்கலாம் என்பது மாற்றப்படவில்லை.

முன்னதாக, கடந்த நவம்பர் 8-ஆம் தேதியன்று புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. ஆரம்பத்தில், ஏடிஎம்களில் நாள் ஒன்றுக்கு 2000 ரூபாய் வரை எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

பின்னர், இந்த உச்சவரம்பு, 2,500 வரை மட்டுமே எடுக்கலாம் என்று உயர்த்தப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்த உச்சசவரம்பு தொகை 4,500 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் இந்த உச்சவரம்பு தொகையை 10, 000 ரூபாயாக உயர்த்தி இன்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்