சில ஏர் இந்தியா விமான சேவைகளில் பெண்களுக்கான இருக்கை ஒதுக்கீடு

பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் மற்றும் துன்புறுத்தல்களை தடுக்கும் வண்ணம் இன்று முதல் பெண்களுக்கு மட்டுமான இருக்கைகள் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சில விமான சேவைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

முதல் கட்டமாக சில உள்நாட்டு விமான சேவைகளில் ஆறு இருக்கைகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆண் பயணிகள், விமான பணிப்பெண் உட்பட பல பெண்களை, தகாத முறையில் தொடுவது குறித்து ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த இருக்கை திட்டத்திற்கு இந்தியாவின் முக்கிய பயணிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது நடைமுறைப்படுத்த முடியாதது என்றும், பாரபட்சமான திட்டம் என்றும் அது விவரித்துள்ளது.

சர்வதேச அளவில் பாலின அடிப்படையில் இருக்கை ஒதுக்கீடு செய்வது என்பது அரிதான ஒன்று ஆகும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்

ட்விட்டரில் எங்களை பின்தொடர :பிபிசி தமிழ் டிவிட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யூ ட்யூபில் காண ; பிபிசி தமிழ் யு டியூப்