ஜல்லிக்கட்டு தடை எதிர்ப்பு - ஐடி ஊழியர்களும் குதித்தனர்

நேற்று ( செவ்வாய்க்கிழமை) காலை முதலில் சென்னை மெரினா கடற்கரையில் ஏரளமான இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் , தற்போது சென்னை ராஜிவ் காந்தி சாலையில் தகவல் தொழில் நுட்ப துறை (ஐ.டி.) ஊழியர்களும்போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகமெங்கும் நடைபெறும் ஜல்லிக்கட்டு ஆதரவு ஆர்ப்பாட்டம்: தமிழகமெங்கும் நடைபெறும் ஜல்லிக்கட்டு ஆதரவு ஆர்ப்பாட்டம் (புகைப்படத் தொகுப்பு)

Image caption ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்டம்: களத்தில் இறங்கிய ஐ. டி. ஊழியர்கள்

நேற்றிரவு முழுவதும், சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இளைஞர்கள் பெரும் திரளாகக் கூடி போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில், பெண்களும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இன்று (புதன்கிழமை) பகல் 1 மணி முதல் சென்னை டைடல் பூங்கா தொழில் நுட்ப பூங்கா மற்றும் ராமானுஜம் தொழில் நுட்ப பூங்கா ஆகியவற்றில் உள்ள தகவல் தொழில் நுட்ப துறை நிறுவன ஊழியர்களும் சாலையில் இறங்கி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர்.

இதனால் ராஜீவ் காந்தி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் கருத்து குறித்த காணொளியை காண: ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும்: போராட்டக்காரர்கள் கருத்து (காணொளி)

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று ஐடி நிறுவன ஊழியர்கள் நடத்திய போராட்டத்தில், 'பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும்' என்றும் 'தமிழக முதல்வர் இது குறித்து உடனடியாக பேசசுவார்த்தையில் ஈடுபட வேண்டும்' என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இப்போராட்டத்தில் கலந்து கொண்ட சில ஐ.டி. ஊழியர்கள் மாடுகளையும், கன்றுக் குட்டிகளையும் அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Image caption மாடுகளையும், கன்றுக் குட்டிகளையும் அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்

மேலும், கோக், பெப்சி போன்ற அந்நிய நாட்டு குளிர் பானங்களை தடை செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.

சென்னையில் உள்ள திருவான்மியூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மற்றும் கந்தன்சாவடி ஆகிய பகுதிகளில் உள்ள பல ஐடி நிறுவன ஊழியர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்